ஒலிவாங்கியில் ஏற்பட்ட கோளாறு சதியல்ல! : சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்ற ஒலிவாங்கியின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சதிச் செயல் அல்ல என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதுபோன்ற சில சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளதாக, சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த கட்டமைப்பு 15 வருடங்கள் பழைமையானது என கூறிய அவர், ஊடகங்கள் இது தொடர்பில் செய்தியிடுகையில் தவறான முறையைக் கையாண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சில ஊடகங்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போதே, மைக்ரோ போன் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக செய்தி வௌியிட்டுள்ளன. எனினும் பிரதமரிடம் வினா, எழுப்பப்படும் வேளையிலேயே இந்நிலை ஏற்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.