சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாகவும் இதனால், விசாரணையை முன்னெடுக்க முடியாமல் காணப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லசந்த கொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கான தகவல்களைப் பெற்றுத் தருமாறு இராணுவத்திடம் பல தடவைகள் கூறப்பட்டும், அதனைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்காதுள்ளதாகவும் திணைக்களம் குற்றம்சாட்டியுள்ளது.