அட்டன் கல்வி வலயம் 03க்கு உட்பட்ட மஸ்கெலியா மவுசாகலை இல 01 தமிழ் வித்தியாலயத்தில் பணிப்புரியும் 09 ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனம் உரிய திகதியில் வழங்கப்படுவதில்லையென மவுசகாலை இல 01 த.வி ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றன.
இந்த ஆசிரியர்களுக்கான மாதாந்த வேதனம் மாதத்தின் 20ம் திகதி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்திட்டங்களுக்கமைய ஆசிரியர்களுக்கான வேதனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் குறித்த
ஆசிரியர்களுக்கு மாதத்தின் 25ம் திகதிகளிலே உரிய ஆசிரியர்களுக்கான வேதனம் வழங்கப்படுவதாகவும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்களுக்கான நிலுவை சம்பளம் ரூபா 400.000.00(4 லட்சம்) நிலுவை தொகை பாடசாலை அதிபரின் கைவசம் கிடைத்துள்ள போதிலும். குறித்த நிலுவைத் தொகையினையும் பாடசாலையின் 9 ஆசிரியர்களுக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றச்சாட்டு குறித்து மஸ்கெலியா மவுசாகலை இல 01 த.வி அதிபர் திருமதி. சுசிலாதேவி சண்முகம் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது, பாடசாலையில் பணிப்புரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய திகதியில் வேதனங்கள் வழங்கப்படுவதாகவும் அவர்களுக்கான நிலுவைத் தொகையினை எதிர்வரும் தினங்களில் வழங்கப்படவுள்ளதாகவும். அதற்கான ஆதாரங்கள் தன்வசம் இருப்பதாக அதிபர் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர்
எஸ். சதீஸ்