மலையகத்தில் மத்தியில் தமிழர் வாக்கை பெற்று அமோக வெற்றியீட்டிய அந்த பிரமுகர் தனக்கு வாக்களித்தவர்களை கண்டு கொள்வதே கிடையாதாம்” அண்மையில் அவரின் சகோதரியின் மக்களுக்கு திருமணம் முடித்து வைத்தவுடன் மலேசியாவில் ஆடம்பர விடுதி ஒன்றையும் வாங்கி கொடுத்து இருக்கிறாராம், அதுமட்டுமல்ல மத்திய நகரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளாராம்? தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவே இல்லையாம், புஸ்ஸல்லாவை, அட்டப்பாகை, ஹந்தானை போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் இவர் மீது வெறுப்படைந்து இருக்கிறார்களாம், வாக்கு கேட்டு போன பின்னர் இவர் இந்த பகுதிகளுக்கு போனதே கிடையாதாம், இனி மத்திய மலையகத்தில் இவரை மக்கள் புறந்தள்ளி விடுவார்கள் என்றே பேசப்படுகிறது.