டயகம சந்திரிகாமம் நோக்கிய நடைப்பயணம்!
டயகம நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தோட்டம்தான் சந்திரிகாம் எனும் சந்திரிகாமம் ஆகும்.
பாதைகள் குன்றும் குழியுமாகவும் ,மேடும் பள்ளமாகவும் காணப்படுகின்றதோடு சிக்கல் நிறைந்த பாதையாகவும் காணப்படுகின்றது.
இந்த தோட்டத்தில் சுமார் நானூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ள போதும் பாதைகளில் எவ்வித வசதியும் காணப்படவில்லை.
சந்திரிகாமம் ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தன்னுடைய இரண்டாம் நிலை கல்வியை கற்பதற்கு டயகம,அக்கரப்பத்தனை,ஹோல்புறூக் போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளிலே கல்வி கற்று வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.வைத்தியசாலைக்கு செல்லும் கர்ப்பிணிகள் ,வயதோபியர்கள,மற்றும் நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதிகளை கூறும் வேட்பாளர்களே!
முடிந்தால் நடந்து வந்து வாக்கு கேட்டுப்பாருங்கள் ….அப்போது தெரியும்
அவர்களின் வழியும் (வலியும்)