எமது அபிவிருத்தி தொடர்பில் விமர்சிப்பவர்களிடம் பணமும் இல்லை. திட்டமும் இல்லை – பிரதமர் தெரிவிப்பு!!

0
167

சிலர் எம்மை ஏசுகின்றனர், விமர்சிக்கின்றனர் ஆனால் இவர்களிடத்தில் திட்டமும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. செலவிட நிதியும் இல்லை. வெறுங்கையோடு திரும்புகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் 28.01.2018 அன்று ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மட்டத்தில் செய்யப்படும் அபிவிருத்தி பணிகளை கீழ் மட்டத்திற்கு கொண்டு வருவது எமது திட்டமாக உள்ளது. கீழ் மட்ட அபிவிருத்தி என வகையில் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளதுடன், பொகவந்தலாவ நகரை சுற்றுலா உல்லாச நகரமாக மாற்றியமைப்போம்.

அதேபோன்று நுவரெலியா கொட்டகலை, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவ வரையிலான பிரதேசங்களை உல்லாச பிரதேசங்காளக மாற்றியமைப்போம். இது எதிர்வரும் தேர்தலின் பின் ஒரு திட்டமாக உள்ளது.

நான் மேடைகளில் எவரையும் ஏசி பேசுவதில்லை. ஆனால் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிப்பதும் மட்டுமல்லாது குறையும் கூறியுள்ளேன். ஆனால் இது அபிவிருத்தி தொடர்புப்பட்ட விடயங்களுக்காக மாத்திரமே.

நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலத்தில் நன்மை பகிக்க கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கூடிய அக்கறைக் காட்டுவதால் இவரை நான் விமர்சிப்பேன். பேசுவேன்.

2020ம் ஆண்டு வரை அரசாங்கத்தை நாம் கொண்டு செல்லவுள்ளோம். இந்த நிலையில் எம்மை தூசிப்பவர்கள் எங்கிருந்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பார்கள். அமைச்சர் திகாம்பரம் மட்டும் பாராளுமன்ற உறுப்பினர் பியதாஸவிடம் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நல்ல திட்டங்கள் இருக்கின்றது. எதிர்காலத்தில் அத் திட்டங்களை பயன்படுத்துவோம்.

இவ்வாறு இத்திட்டங்களை பிரதேச சபை நகர சபைகளில் முன்னெடுக்க வேண்டும் என்றால் அந்த சபைகளின்ட அதிகாரம் ஐ.தே.காவுக்கு தேவையாக உள்ளது.

இந்த சபைகள் எம்மிடம் இல்லை என்றால் அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுப்பது என்று கேட்டார். தோட்டப்பகுதிகளில் இந்திய பிரதமர் கூறியது போல் 10,000 வீடுகளும், அரசு ஊடாக 5000 வீடுகளும் என மேலும் 15,000 வீடுகள் கட்டப்படவுள்ளது.

அதேபோன்று கிராமங்கள் மற்றும் தோட்டங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தேசிய அபிவிருத்தியின் முன்னெடுக்கும் திட்டங்களை போல் அடிமட்ட அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படும். இதில் தோட்ட வீதிகள் பாடசாலைகள் என பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு வீடுகள் அமைப்பதில் இத்தனை வீடுகள் தான் அமைத்துள்ளீர்கள் என விமர்சித்தவர்கள் ஒரு துண்டு காணியவது இதுவரை பெற்றுக்கொடுத்துள்ளார்களா இருப்பதை கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது எமது நோக்கமாக உள்ளது.

நாட்டில் அனைத்து இன மக்களின் அபிவிருத்தி ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கு பிறகு பாரியளவில் அபிவிருத்திகளை ஐ.தே.கட்சி இந்த அரசாங்கத்திற்குள் நுழைந்து முன்னெடுத்து வருகின்றது.

அதி வேக நெடுஞ்சாலைகளை அமைப்பது மட்டும் எமது கடமைகள் அல்லாது தேசிய மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகையால் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு திட்டமும், நிதியும் எம்மிடம் உள்ளது. வீடமைப்பு, வீதி, மின்சாரம், கல்வி வளர்ச்சி போன்றவைகளுக்கு நிதிகளும் திட்டங்களும் எம்மிடம் காணப்படுவதனால் இதனை தேசிய ரீதியில் அரசாங்கம் நகர சபை பிரதேச சபை அதிகாரங்களுடன் முன்னெடுக்க வேண்டும்.

எனவே எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.காவின் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக நாம் வெற்றியீட்டியவாறு அபிவிருத்தி பணிகளை எதிர்காலத்தில் தங்கு தடையின்றி முன்னெடுப்போம் என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here