நோர்வூடில் பால் ஏற்றிசெல்லும் பவ்சர் வண்டி விபத்து- வர்த்தக நிலையம் ஒன்று சேதம்!!

நோர்வூட் நகரில் இருந்து கொழும்பு பகுதிக்கு பால் ஏற்றிசெல்லுவதற்காக சென்று கொண்டிருந்து பவ்சர் வண்டி -விபத்து வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சேதம்.

நோர்வூட் நகரில் இருந்து பால் சேகரிக்கும் நிலையத்தில் சேகரிக்கபட்ட பாலினை ஏற்றி செல்வதற்காக பயணித்து கொண்டிருந்த பவ்ஷர் வண்டி ஒன்று 04.02.2018. ஞாயிற்றுகிழமை காலை 10.15மணி அளவில் விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் நகர்புரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுகுள் குறித்த பவ்ஷர் வண்டி உடைத்து சென்றமையினால் பிரதேசத்தில் உள்ள வர்த்தகம் நிலையமொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

04 (1) 07 01 (1)

இதேவேலை 70வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு குறித்த நோர்வூட் நகரபகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடபட்டு காணபட்டுள்ளதோடு சம்பவம் தொடர்ப்பில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடப்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்