நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகள் பதிவு!

0
167

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இன்று (10.02.2018) காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றது.

4 மணி வரை 70 வீதமான வாக்களிப்பு நிறைவடைந்ததாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

காலை வேளையில் வாக்களிப்பில் மந்தமாக காணப்பட்டாலும், பகல் வேளையில் வாக்களிப்பு வீதம் அதிகரிகத்து காணப்பட்டது. 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 504 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

விகிதாசார மற்றும் தொகுதிக் கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்காக அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும்.

பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிசமாக வாக்குகளுள்ள நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரே இடத்தில்வைத்து எண்ணப்படும். இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும்.

உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான நுவரெலியா மாவட்ட முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு பிறகு அறிவிக்கப்படும் என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here