ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்!!

0
160

ரஷ்யாவின் சராடோவ் விமான சேவையைச் சேர்ந்த விமானமொன்று, தலைநகர் மொஸ்கோவுக்கு அருகில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 71 பேரும் பலியாகினர் என, சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 65 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் காணப்பட்டிருந்தனர்.

மொஸ்கோவின் டொடோடெடோவோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களில், ரேடாரிலிருந்து காணாமல் போனது எனவும், அதன் பின்னரே அது விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

பனியால் சூழப்பட்ட நிலையில், அவ்விமானம் விபத்துக்குள்ளாகிக் காணப்பட்ட காட்சிகளை, ரஷ்ய அரச தொலைக்காட்சி காண்பித்தது.

“சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எவரும் தப்பவில்லை” என, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்ன காரணத்துக்காக விபத்துக்கு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மோசமான வானிலை, விமானியின் தவறு உள்ளிட்ட காரணங்களை ஆராய்ந்து வருவதாக, ரஷ்ய போக்குவரத்து அமைச்சுத் தெரிவித்தது.

விபத்தை நேரில் கண்டவர்களின் கருத்துப்படி, எரிந்தவண்ணம் வானத்திலிருந்து கீழே விழும் விமானத்தைக் கண்டதாகத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here