உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எமஸ்ட் பகுதியில் 15.02.2018 அன்று இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஏழு பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பகுதியிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதன் காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)