கேகாலை – கரடுபன சந்தியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துடன் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரணாயக்க – உஸ்ஸாபிடிய பிரதேசத்தினை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.