23.02.2018 அன்று மாலை வேளையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம் விலகியதால் தடைப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.குறித்த நானுஓயா ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு புறம் மட்டும் ரயில் சேவை இடம்பெறும் எனவும், இரண்டாவது ரயில் ஓடு பாதை மறுசீரமைக்கப்படுவதாகவும், அதன்பின் வழமைப்போன்று ரயில் சேவைகள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு நோக்கிச் சென்ற உடரட மெனிக்கே 24.02.2018 அன்று காலை வழமைபோன்று புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
(க.கிஷாந்தன்)