வட்டகொடை சமன்புற கொலனி பகுதியில் குடியிருப்புகளை அண்மித்து காணப்படும். கருப்பந்தேயிலை மரங்களை வெட்டி அகற்றுமாறு அதனை அண்மித்து வாழும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் காலநிலைசீ ர்கேடு ஏற்படும் பட்சத்தில் இம்மரக்கிளைகள் முறிந்து குடியிருப்பின் மீது விழும் அபாயம் நிலவுகிறது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்து குடியிருப்புகளின் மீது விழும் அபாய நிலையும் தோன்றியுள்ளது. இது தொடர்பாக பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவித்தும் இதுவரை மரங்களை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென அதனை அண்மித்து வாழும் குடியிருப்பாளர்கள்.
இம்மரங்கள் சூழவுள்ள பகுதியின் குடியிருப்புகளில் முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் வாழ்ந்து வருவதனால் கடும் காற்று வீசும்போது மிக அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் எனவே தங்களின் நலன் கருதி உடனடியாக இம்மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்