அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது.
இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 118 முதல் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
உலக சந்தையில் துரித கதியில் சீனியின் விலை உயர்வடைந்து செல்கின்றது.
இந்தியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியினால் இவ்வாறு சீனி நிரம்பலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு கிலோ கிராம் சீனி 85 ரூபா முதல் 90 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.