பொகவந்தலாவ நகர பொதுமலசல கூடம் மீண்டும் திறக்க கோரிக்கைவிடுக்கும் பொதுமக்கள்!!

0
155

பொகவந்தலாவ நகர பொதுமலசல கூடம் மூடப்பட்டு காணபடுகின்றமையால் சிவனொளிபாதமலைக்கு வருகின்ற பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக குற்றச்சாற்று.அம்பகமுவ பிரதேசசபையினால் புதிதாக நிர்மாணிக்கபட்ட பேருந்து நிலையத்தோடு தொடர்புடைய பொது மலசல கூடம் சிலமாதங்களாக மூடப்பட்டுகாணபடுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து சிவனொளிபாதமலைக்கு வருகை தருகின்ற பக்தர்களும் மற்றும் நாளாந்தம் பொகவந்தலாவ நகர்புரத்திற்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

சிவனொளிபாதமலையை தரிசிக்க வருகின்ற கொழும்பு,இரத்தினபுரி, பலாங்கொட எம்பிலபிட்டி, பதுளை, ஹம்பாந்தோட்ட, போன்ற பகுதிகளில் இருந்து சிவனொளிபாதமலைக்கு வருகின்ற பக்தர்கள் பலாங்கொடை பொகவந்தலாவ ஊடாகவே செல்லுகின்றனர். இதனால் விடுமுறை நாட்களிலும் மற்றும் நாளாந்தம் அனேகமான மக்கள் இவ்வழியின் ஊடாகவே போக்குவரத்தினை மேற்கொள்ளும் போது குறித்த மலசல கூடத்தினையே நாடாவேண்டியுள்ளதாக இம் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேலை நாளாந்தம் பொகவந்தலாவ நகரத்திற்கு வருகின்ற பாடசாலை மாணவர்கள் முதல் பொதுமக்கள் மற்றும் வாகனசாரதிகளும் இந்த மலசல கூட பிரச்சினையை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த நகரத்தில் உள்ள மலசல கூடத்தினை பொறுப்பேற்று பாராமரிப்பவர்கள் அதனை முறையாக மேற்கொள்வதில்லையெனவும் பிரதேசமக்கள் சுற்றிகாட்டுகின்றனர் .

IMG-dadbba030ab350cce3b8723bce447948-V

எனவே மூடப்பட்டுகிடக்கும் பொதுமலகூடத்தினை மீண்டும் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் பிரதேசமக்களும் சிவனொளிபாதமலைக்கு வருகின்றவர்களும் கோரிக்கைவிடுக்கின்றனர்.

 

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here