தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் கிழ் பொகவந்தலாவ மாணிக்ககல் அகழ்வுகளை மேற்கொள்ளும் இடத்தில் முகாமையாளராக பணிபுரியும் உத்தியோகத்தரின் விடுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பொகவந்தலாவ பொலிஸாா் இன்று காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனா்.
குறித்த முகாமையாளருக்கு பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள கல்பங்களா என்ற விடுதியில் வைத்தே இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்டவரிடம் 35ஆயிரம் ருபா பெருமதியான தொலைகாட்சி ஒன்றும் 5ஆயிரம் ருபா பெருமதியான ரிசிவா் ஒன்றும் மீட்கபட்டுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.
கைது செய்யபட்ட நபா் பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தை சோ்ந்தவா் எனவும் சந்தேக நபா் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஜா்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.
பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்