பொகவந்தலாவ பெற்றோசோ பீரீட்லேன் த.வித்தியாளயத்தில் ஆசிரியர்கள் பற்றாகுறை – பெற்றோர்கள் விசனம்!

0
145

பொகவந்தலாவ பெற்றோசோ பீரீட்லேன் தமிழ் வித்தியாளயத்தில் ஆசிரியர்கள் பற்றாகுறையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் விசனம்.

நடவடிக்கை எடுக்குமா மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு

மத்திய மாகாணம் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பெற்றோசோ பீரீட்லேன் தமிழ் வித்தியாளயத்தில் கடந்த எட்டு மாதகாலமாக ஆசிரியர் பற்றாகுறை காணபட்டு வருகின்றமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

குறித்த பாடசாலையில் மொத்தம் அதிபர் உட்பட மொத்தம் ஆறு ஆசிரியர்கள் தேவைபடும் பட்சத்தில் கடந்த எட்டு மாதகாலமாக நான்கு ஆசிரியர்களை கொண்டு பெற்றோசோ பீரீட்லேன்ட் தமிழ் வித்தியாளயம் இயங்கிவருவதாகவும் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித பாடதிட்டங்களும் இடம்பெறுவதில்லையெனவும் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை தரம் 01முதல் 05வரை இயங்கி வருவதோடு சுமார்  100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கபடுகிறது. எனவே பெற்றொசோ பீரீட்லேன்ட் பிரதேச பெற்றோர்களின் முறைபாடு தொடர்பாக அட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் பி.ஸ்ரீதரனிடம் நாம் தொடர்பு கொண்டு வினவினோம் .

இதற்கு பதிலளித்த வலயகல்வி பணிப்பாளர் பொகவந்தலாவ பெற்றோசோ தமிழ் வித்தியாளயத்தில் கடந்த எட்டு மாதகாலமாக இடம் பெறுகின்ற ஆசிரியர் பற்றாகுறை குறித்து வித்தியாளயத்தின் அதிபர் எனது கவனத்திற்கு கொண்டு வரவில்லையெனவும் இது தொடர்பாக வித்தயாளய அதிபரிடம் கலந்துறையாட இருப்பதாக குறிப்பிட்டார்.

எனவே பொகவந்தலாவ பகுதியில் அதிக கஷ்டபிரதேசமாக கருதபடும் பொகவந்தலாவ பெற்றேசோ பீரீட்லேன்ட் தமிழ் வித்தியாளயத்தில் தொடரும் ஆசிரியர் பற்றாகுறை தொடர்பில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கபட வேண்மேனவும் பொகவந்தலாவ பெற்றோசோ பீரீட்லேன்ட் பிரதேச மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here