மாணவர்களுக்கு வழங்கி வரும் சீருடைக்கான வவுச்சர்களை நிறுத்திவிட்டு, எதிர்வரும் வருடம் தொடக்கம், மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்குவதற்கு ஆலோசித்துள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெற்றோரால், தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை அமையவே, இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இன்னும், வவுச்சர்களைக் கொண்டு, சீருடைக்கான துணிகளைக் கொள்வனவு செய்யும் போது, பெரும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.