டெம்பஸ்டோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழாவின் அலங்கார வேலை நிமித்தம் மின்சாரம் பெற முயன்ற குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பலி
வட்டவளையில் சம்பவம் .
வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ரொசால்ல டெம்பஸ்டோ தோட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய திருவிழாவின் போது அலங்கார வேலைபாடிற்க்காக தோட்ட தொழிற்சாலையில் மின்சாரம் பெறுவதற்கு முயன்ற குடும்பஸ்தர் அதிக வலு கொண்ட மின்சாரம் தாக்கியதால் ஒருவர் பலியாகி உள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 17.03.2018.சனிகிழமை இரவு 07 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மின்சாரத்தில் சிக்குண்டு உயிர் இழந்த நபரை குறித்த பிரதேசத்திற்கான மின்சாரத்தினை நிறுத்தியபிறகே குறித்த சடலம் மீட்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கபட்டவர் ரொசல்ல டெம்பஸ்டோ தோட்டத்தைச் சேர்ந்த 30வயதுடை எஸ்.சரவணன், இரண்டு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணபட்டுள்ளதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு மரணவிசாரணைகளின் பின்னர் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
இதனால் டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் ஆலய திருவிழா தற்பொழுது ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ், மு.இராமச்சந்திரன்