மவுசாகலை நீர்தேக்கத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது – இயந்திரங்கள் மீட்பு!!

0
142

மஸ்கெலியா மவுசாகலை நீர் தேக்கத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவரை மஸ்கெலிய அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மண் அகழும் பணியில் 20.03.2018 மாலை மின்சார சபையினரால் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மண் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் உழவு இயந்திரம் இரண்டையும் அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.

மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் எனினும் மண் அகழ்விற்கு அனுமதி பத்திரம் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மண் அகழ்விற்கு பயன்படுத்திய இயந்திரங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DSC00225 DSC00226

கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here