இவ்வருடம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரங்களை கைப்பற்றியுள்ள நிலையில் நோர்வூட் பிரதேச சபையினையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அதிகாரத்தினை 28.03.2018 அன்று உறுதிபடுத்திக்கொண்டதனையடுத்து அச்சபைக்கான தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களான டி.கிசோகுமார் அவர்களை தலைவராகவும், கே.சிவசாமி உபதலைவராக 28.03.2018 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்து உள்ளுராட்சி தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 11 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 08 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக 01 உறுப்பினரும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக 01 உறுப்பினருமாக மொத்தம் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யபட்டனர்.
இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)