ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என்று பொய்யாக கணித்துக் கூறிய ஜோசியர் விஜித ரோஹண விஜயமுனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இரகசியப் பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
அதன்படி இந்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.