சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுட்ட நால்வரை கைது செய்துள்ளதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய. உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் பகுதியிலே 04.04.2018 மாலை சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே கைது செய்ப்பட்ட செப்பல்டன் தோட்ட பகுதியை சேர்ந்த நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன், எஸ். சதீஸ்