தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழா எதிர்வரும் 8ம் திகதி நுவரெலியா நகரில் இடம்பெறவுள்ளது.தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிரணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழாவானது மஸ்கெலியா மற்றும் அக்கரபத்தனை பிரதேசத்தில் முதற்கட்டமாக இடம்பெற்றது,
இதன் அடுத்த கட்டமானது எதிர்வரும் 8ம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மு.ப 9.00 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளமையும் தொழிலாளர் தேசிய சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே நடைபெறவிருக்கும் இவ்விழாவில் மகளிர் அனைவருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.