பெற்றோர்களின் முக்கிய கவனத்திற்கு – எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி!!

0
145

பரீட்சைகளில் சித்தியடையும் மற்றும் சித்தியடையாத மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் ஒரே விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அதேபோல மனிதர்கள் என்ற அடிப்படையில் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டியது அனைத்து இளைஞர்களுக்கும் சவாலாக உள்ளது.

பரீட்சைகளில் சித்தியடையும் மாணவர்களை ஊக்குவிப்பதுபோல, பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்களுக்கு அவர்களின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பானவர்கள் செயற்படுவதை தவிர்ப்பது முக்கியமானதாகும்.மாணவர்களுக்கு உயர் மதிப்பை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்.

அதனூடாக சமூகத்தில் உள்ள பல்வேறு சவால்கள் மற்றும் அழுத்தங்களில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க பெற்றோர்களின் தலையீடு மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here