கம்பளை அட்டபாகையில் மரக்கறி லொறி” பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; இருவர் படுகாயம்!

0
139

நுவரெலியா பகுதியிலிருந்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் அட்டபாகை பிரதேசத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

DSC00447 DSC00454

 

09.04.2018 அன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கம்பளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் இருந்த மரக்கறி வகைகள் வீணாகியுள்ளதோடு, லொறியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here