பல சூட்சுமமான முறையில் ஏமாற்றப்படும் தொழிலாளிகளால் காப்பாற்றப்படும் பொருளாதாரம்!!

0
139

மிக குறைந்து ஊதியத்தினாலும் சூட்சுமமான சுரண்டல்முறைகளினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமூகமாக இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்களிப்பை செய்துவரும் மலையக தோட்டத்தொழிலாளர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள்விடயத்தில் அக்கறைகாட்டவேண்டியதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது தற்போது தோட்டப்பகுதி மக்களின் அபிவிருத்திவிடயத்தில் சில அசைவுகள்தென்படுகின்றன பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் ஆவர்களால் அமுல்படுத்தப்பட்டு வரும் தோட்டத்தொழிலாளர்களுக்கான தனிவீட்டுத்திட்டத்தை குறிப்பிட்டு சொல்லலாம் தோட்டங்கள் கிராமமயப்படுத்தப்படும் என்ற அடிப்படையில் தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்குமட்டும் இத்திட்டத்தை அமுல்படுத்தினால் தோட்டங்கள் கிராமமாகிவிடுமா? இவ்வாறு 03-04-2018 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார். அந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து தெரிவிக்கையில் சுமார் 08லட்சம் பேர் தோட்டங்களில் லயின் அறைகளில் வாழ்வதாகவும் அதில் சுமார் 1.5இலட்சம் முதல் 2இலட்சம்வரையிலானவர்களே தோட்டத்தொழிலாளர்களாகவிருக்கின்றனர் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன ஏறக்குறைய பெருந்தோட்டங்களில் தோட்டத்தொழிலாளர்கள் அல்லாத 70%மானோர் லயின் அறைகளில் வாழ்கின்றனர் தோட்டப்பகுதியில் வாக்காளர் தொகையிலும் சரி சனத்தொகையிலும் இந்த பிரிவினரே பெரும்பான்மையாக இருக்கின்றனர் இவர்கள் தோட்ட நிர்வாகத்தினாலும் அரசியல் வாதிகளாலும் தொடர்ச்சியாக புறக்கனிக்கப்பட்ட சமூகக்கூட்டமாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
தோட்டப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தும் வீடமைப்புதிட்டமாகவிருக்கட்டும் ஏனைய அரசநிதியிலான வளப்பங்கீடுகளாகவிருக்கட்டும் அவைகளில் இந்தப்பிரிவினர் இனைத்துக்கொள்ளப்படுவதில்லை,இவர்கள் என்ன வேற்றுகிரகத்திலிருந்து வந்தவர்களா? இல்லையே இந்த தோட்டங்கள் உறுவாக்கப்பட்டதில் பெரும்பங்குவகித்தவர்கள் அல்லவா இவர்கள்,இவர்கள் கிட்டிய வருடம்வரை தோட்டத்தொழிலாளர்களாகவிருந்து ஓய்வுபெற்றவர்களும் அவர்களின் பிள்ளைகளுமாவர்கள் இன்று தோட்ட லயின் அறைகளில் வாழும் இந்த பிரிவினரில் ஆசிரியர்கள் சிறுவர்த்தகர்கள் கடைசிப்பந்திகள் போன்ற அரச தனியார்துறைகளில் பணிபுரிகின்றவர்களும் அடங்குகின்றனர் இவர்களின் நிரந்தரவதிவிடமே இந்த தோட்டங்கள்தான் இவர்களை புறக்கணித்துவிட்டு 30%தொழிலாளர்களுக்கு மட்டும் வீடமைத்துகொடுத்துவிட்டால் தோட்டங்கள் கிராமங்களாகிவிடுமா?

இந்த மக்களின் பிரச்சினைகளை ஒரு கட்சியென்ற அடிப்படையில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி2015ம் ஆண்டுமுதல் வெளிப்படுத்திவருகின்றது ஆகவே பெருந்தோட்டமக்களின் அடிமைச்சின்னங்களாக கணிக்கப்படுகின்ற லயங்கள் தகரத்தெரியப்படவேண்டுமென்றால் பெருந்தோட்டப்பகுதிகளில் வரிசைவீடுகளில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி காணியுடன் வீடுகள் வழங்கப்படவேண்டும் அப்போதுதான் தோட்டங்கள் கிராமங்களாக மாறும் ஆகவே அரசாங்கம், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட சகலரும் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் இவர்கள் தொடந்து புறக்கணிக்கப்பட்டால் அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டிவரும் ஏனென்றால் பாராளுமன்ற மாகாணசபை பிரதேசபை தேர்தல்களில் தீர்மாணிக்கும் சக்தி இவர்கள் தான் என்பையும் அரசியல்வாதிகள் மறந்து விடக்கூடாது.

மேலும் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில ஆம்பகமுவ நோர்வூட் மஸ்கெலிய பிரதேசசபைகளில் நட்சத்திர சின்னத்திலும் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு திருக்கோயில் பிரதேசசபைகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் பட்டனமும் சூழலும் பிரதேசசபைகளிலும் வடமாகாணத்திலும் உதயசூரியன் சின்னத்தில் எமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தோம் இத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நாம் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் நிர்வாகத்தை ஈரோஸ் ஜனநாயக முன்னணி கைப்பற்றிக்கொண்டது இந்த சபையின் தலைவர் தெரிவின் போது சகல கட்சியை சேர்ந்தவர்களும் எமக்கு ஆதரவாக வாக்களித்தமை சிறப்பான விடயமாகும்.

மலையகத்தில் எமக்கு உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் சுமார் 2000அளவிலான வாக்குகளை பெற்றுள்ளமையானது மக்கள எமது அரசியல் நகர்வுக்கு வழங்கிய அங்கிகாரமாக கருதுகின்றோம்
இந்த தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி மக்கள் நலன்சார்ந்த முக்கிய பலவிடயங்களை முன்வைத்தே களமிரங்கியிருந்தது நாம் முன்வைத்த விடயங்களை வெற்றிக்கொள்வதற்கு சகலவழிகளிலும் முயற்சிப்போம்.

மலையகத்தில் எமக்கு உறுப்பினரொருவர் கிடைக்கவில்லை என்பதற்காக நாம் மலையக அரசியல் களத்தைவிட்டு ஓடிவிடப்போவதில்லை நாம் தேர்தலுக்கு முன்னமே குறிப்பிட்டப்படி தேர்தல் வெற்றி தோல்வி எமது அரசியல் பயணத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது
ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களையும் இனைத்து செயற்படும் ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல்கட்சி என்ற அடிப்படையில் அந்தந்த பிராந்தியங்களில் நிலவுகின்ற பிரச்சினைகள் தேவைகளை இனங்கண்டு பிராந்தியத்திற்கு ஏற்றவகையில் எமது செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் மிக நிதானமாக நகர்த்தி செல்கின்றோம்
மலையகத்தில் ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 1975ம் ஆண்டுகாலம் தொட்டே மலையகத்திற்கும் ஈரோஸ் அமைப்புக்கும் நெறுக்கமான உறவு இருக்கின்றது அமைப்பின் பிரதானகொள்கையிலேயே மலையகத்தை இனைத்திருக்கின்றது 1985 திம்பு பேச்சுவார்த்தையில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினையை முன்வைத்து சர்வதேசத்தின் பார்வையை மலையக மக்கள் மீது திருப்பியிருந்தது 1988 மலையக மக்களுக்கான தனியான நிர்வாக அலகு(மலை மாகாணம்) தேவை என்ற கோரிக்கை முதன் முதல் முன்வைத்த து 1990 மலையக மக்கள் செரிவிற்கேற்ப நிர்வாக பிரிவுகள் உறுவாக்கப்படவேண்டும்,வீடு காணி சொந்தமாக வழங்கப்படவேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மேதின பிரகடனத்தைவெளியிட்டோம் 1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மலையகமக்கள் சார்பாக ஒரு பிரதிநிதிகூடதெரிவாகாத நிலையில் அமைப்பு வடகிழக்கில் பெற்ற 13ஆசனங்களில் ஒன்றை மலையகத்திற்கு ஒதுக்கித்தந்து அந்த இடைவெளியை நிரப்பியது ஈரோஸ் அமைப்புதான்,மலையக மக்களின் உரிமைசார் அரசியல் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்படும் நாம் மக்களின் அன்றாட பிரச்சனைகள் தொடர்பாகவும் அவதானம்செலுத்துகின்றோம் கல்வி கலைகலாசாரமேம்பாடு சுயதொழில் தொழில்வாய்ப்பு போன்றவிடயங்களிலும் எதிர்காலத்தில் கவனம்செலுத்தவுள்ளோம்.

நாம் மலையகத்தில் எதிர்ப்பு அரசியல் செய்யப்போவதில்லை எமது நகர்வு அரசியல் வாதிகளின் நேர்மையான செயற்பாடுகளுக்கு வலுசேர்ப்பதாகவே இருக்கும் 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முன்வைத்து த.மு.கூட்டணிக்கு எமது ஆதரவைதெரிவித்திருந்தோம் அவர்களின் செயற்பாடுகளில் திருப்பதியான சிலவிடயங்கள் நடந்தேரியுள்ளன த.மு.கூ இன்று மத்திய அரசில் வலுவான நிலையில் உள்ளது அவர்களுக்கூடாக சிலவிடயங்களை சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்கமுயற்சிப்போம் அதே போல் தற்போது உள்ளுராட்சிசபைகளில் இ.தொ.கா வலுவான நிலையிலுள்ளது கிராமமட்டத்தில் பிரதேசசபைக்கூடாக சமூகத்திற்கு செய்யக்கூடிய வியங்கள் தொடர்பாக இ.தொ.கா.வுடனும் கலந்துரையாடுவோம்.

மஸ்கெலிய பிரச்சினை
அண்மையில் மஸ்கெலியாவில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த மலையகத்தையும் தலைகுணியவைத்துள்ளது அதோடு அரசியல் அடாவடித்தனங்களும் அராஜங்களும் இன்று ஆண்களையும் தாண்டி பெண்களையும் பீடித்துள்ளதை சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் வெளிச்சம்போட்டுகாட்டியுள்ளன இதவும் வருந்தத்தக்கவிடமாகும்.

இன்று இலங்கை அரசியல் மட்டுமல்ல மலையக அரசியலும் மாசுபட்டு காணப்படுகின்றன இந்த நிலைமாற வேண்டும் அரசியல்தூய்மைப்படுத்தப்படவேண்டும் தகுதியானவர்களை தெரிவு செய்யும் ஞானத்தை மக்கள் பெறவேண்டும் சமூக பற்றாளர்கள் அரசியல்வாதிகளை விமர்சனம்செய்துக்கொண்டுமட்டும் இருக்காது சரியானவிடங்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும் இளைஞர் யுவதிகளுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்தவேண்டும் மாணவர்களும் அரசியல் அறிவைபெறவேண்டும் தேர்தல்காலங்களில் பெற்றோர்களை குடும்பத்தாரை சமூகத்தை வழிநடத்துக்கூடியவர்களாக மாணவர்கள் பங்களிப்புசெய்யவேண்டும் அரசியல் ரீதியாக பயிற்றப்பட்ட ஒழுக்கமுள்ள இளைஞர் சமூதாயத்தை அரசியல்களத்திற்குகொண்டுவரவேண்டும்.

ஹட்டன் நகரசபை
ஈரோஸ் ஜனநாயக முன்னணி தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடாது என்றநோக்கத்தோடு ஹட்டன் நகரசபைக்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்திருந்தது அங்கு இலங்கை கமயூனிஸ்ட் கட்சி வேட்பாளரே பட்டியல் மூலம்தெரிவுசெய்யப்பட்டுள்ளார் ஆகவே ஹட்டன் நகரசபை உறுப்பினர் தெரிவிற்கும் செயற்பாட்டுக்கும் ஈரோஸ் ஜனநாய முன்னணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த உள்ளுராட்சி சபைதேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த சகலருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு எமது இரண்டாம்கட்ட அரசியல் பயனத்தில் முதலாவது நகர்விலேயே பிரதேசசபை ஒன்றைவெற்றிக்கொண்டுள்ளோம் அந்த உற்சாகத்துடன் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது மக்களுக்கான அரசியல் பயணத்தை மிக வீரியத்துடன் வடக்கு கிழக்கு மலையக பகுதிகளில் முன்னெடுத்து செல்லும் என்பதை கூறிக்கொள்கின்றோம் எனவும்தெரிவித்தார்.

 

மலையக கள்ளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here