கம்பளையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் உயிரிழப்பு!!

0
151

கம்பளை – தொலுவ பிரதான வீதியின் கஹவத்த கிளை வீதியின் துன்தெணிய சந்தியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுங்காயம்பட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய வரகாபொல, மெதிரிகிரிய மற்றும் கம்பளை மாவெல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 82,72 மற்றும் 74 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சாரதியால் முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here