பெருந்தோட்ட சேவையாளர்களின் 200 வருடகால வரலாற்றில் நிரந்தர குடியிருப்புகளின்றி அவதிபடுவது வேதனைக்குரியதாகும்.நிலைமையை விளக்கி பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசநாயக்காவிற்கு ஆறுமுகன் தொண்டமான் அவசர கடிதம்
பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தில் நிரந்தரமான குடியிருப்புகளை துரித கதியில் வழங்கப்பட வேண்டுமென பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவரும்ää இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஃ பொதுச் செயலாளரும்ää நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அமைச்சர் நவின் திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும்ää சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்காவுக்கு எழுதிய
அவசரக் கடிதமொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இற்றைக்கு 200 வருடங்களுக்கு கடந்த நிலையில் பெந்தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் பெருந்தோட்ட சேவையாளர்கள் இருந்து வருகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளோää குடியிருப்புகளோ இன்றி அவதியுறும் நிலைமை தோன்றியிருப்பது குறித்து வேதனையைத் தருகின்றது. தோட்டத் தொழிலாளர்களோடு கைகோர்த்து நிற்கும் இவர்கள் வாழ்வியலில் எவ்விதமாற்றமும் காணப்படவில்லை.
தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சர் நவின் திசநாயக்காவுடன் கடந்த 2017ம் ஆண்டு நேரடியாக இது தொடர்பில் கலந்துரையாடல் கூட்டமொன்றை நடத்தியிருந்தார். ஆனால் இது வரையிலும் உரிய தமீர்வு எட்டப்படவில்லை. 06.10.2008 திகதியிடப்பட்ட 08ஃ1862ஃ309ஃ039 அமைச்சரவை பத்திரத்தில் தோட்ட சேவையாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டுமென்பதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு அமைவாக அந்தந்த தோட்டங்களிலேயே அமுல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு குடியிருப்புக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இன்று அது செயற்படுத்தப்படவில்லை. பல்வேறு தரப்புகளோடும் பலமுறை அரசாங்கத்திற்கு முறையீடு செய்தும் புஸ்வானமாக பலனின்றி போனது சேவையாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதற்கான ஒரு காத்திரமான தீர்வை பெருந் தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசநாயக்கவுடன் பேச்சு வார்த்தையின்; தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தீர்வு காணுவார் என்று சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.தேவதாஸ்