தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாக்கலையில் நடாத்த தீர்மானம்!!

0
165

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாகலையில் நடாத்த தீர்மானம்-  கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்ஏ. ஆரவித்தகுமார் தெரிவிப்பு.தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் எதிர்வரும் 07ம் திகதி தலாவாக்கலையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த குமார் தெரிவித்தார் .

மே மாதம் முதலாம் திகதிவருகின்ற சர்வதேச தொழிலாளர் தினத்தை வெசாக் பூரண தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 07ம் திகதி கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முண்ணனி ,மலையக மக்கள் முன்னணி ஆகிய கூட்டணி இனைந்து இம்முறையும் தலவாக்கலையில் எதிர்வரும் 07ம் திகதி தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இதேவேலை இலங்கை தொழிலாளர் காங்ரசின் மேதின கூட்டம் தொடர்பில் ஏப்ரல் மாதம் 15,16ம் திகதிகளில் உத்தியோக பூர்வாக அறிவிக்கபடுமென இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here