நாடு நாளை(14-04-2018)இன்னுமொரு புதுவருடம் கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றது, ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகளென சகலரினதும் வாழ்த்துச்செய்திகள் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து சகலரும் செளபாக்கியமாக வாழவேண்டுமென்ற கருத்துப்பட ஊடகங்களில் நிறைந்து காணப்படும் கடந்த பலவருடங்களாக இதே விடங்களே வாழ்த்துச்செய்திகளில் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதா? என்றால் பதில் இல்லை என்றதாகவே இருக்கின்றது ஆகவே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியவர்களும் தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடியவர்களும் வாழ்த்துத்தெரிவிப்பதோடு நின்று விடமால் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடும் விடயங்களை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமானபணிகளில் ஈடுபடவேண்டுமென்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஐீவன் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் என்ற வகையில் பொதுவான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் அதேவேலை சிறுபான்மை என்ற வகையில் இன்னுமொருவகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர் இனவாதத்தால் நாடு கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பெரிய இழப்புகளுக்கு முகம்கொடுத்துள்ள ஆனால் அந்த இழப்பக்களுக்கான காரணிகளை இனங்கண்டு தீர்த்துவைக்கப்பட்டுள்ளதா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஒரு காணிக்கு சொந்தமாகமாட்டோமா?என மலையகமக்களும் தமது சொந்தகாணி விடுவிக்கப்படாத?என வடபகுதி மக்களும் ஏக்கத்துடனும் தங்களது காணி பறிபோய்விடுமோ என்ற அச்சத்துடனும் கிழக்கு தமிழர்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் ஆதோடு யுத்தத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சொந்தங்கள் தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு ஒரு வருடத்தையும் தாண்டி எதிர்ப்பார்ப்புகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே இந்தவருடமாவது மக்களின் அச்சம் நீங்கி ஏக்கங்களும் எதிர்ப்பார்புகளும் நிறைவேறும் ஆண்டாக மலர்ந்து மறையவேண்டும் சகலருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஜீவா