தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்…

0
144

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து மலர்ந்திருக்கும் புதுவருடத்தை மிக மகிழ்ச்சிகரமாக ஆலய வழிபாடுகளுடன் வீட்டு வழிபாடுகளையும் நடத்தி கொண்டாடினார்கள்.

பெருந்தோட்ட பகுதி ஆலயங்கள் மற்றும் நகர்புர இந்து ஆலயங்களில் மருத்துநீர் பெற்று சுபவேளையில் தலையில் தேய்த்து குளித்து நேற்றைய தினம் புத்தாண்டு தினத்திற்குரிய நிறத்திற்கு ஏற்ற புத்தாடையை அணிந்து ஆலய வழிபாடுகளிலும். ஏனைய சமய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் 14.04.2018 அன்று குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மா குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

DSC05793 DSC05802

இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here