ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் வகுப்­பு­கள் நடத்த தடை!!

0
156

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம்.

இதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவை விரைவில் வெளி­யி­டப்­படும் என புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார அபி­வி­ருத்தி¸ சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் பி.சுரேஸ் தெரி­வித்தார்.

அவர் இது­பற்றி மேலும் தெரி­விக்­கையில்¸ இந்த நாட்டின் பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வரும்¸ நல்­ல­வர்­க­ளா­கவும். கல்­வி­மான்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது எல்­லோ­ரது மன­தி­லு­முள்ள ஆசை­யாகும். இதற்­கான நல்ல பண்­பு­க­ளையும்¸ பழக்க வழக்­கங்­க­ளையும் இள­மை­யி­லி­ருந்தே வழங்­கு­கின்ற பணியை¸ இந்து சம­யத்தைப் பொறுத்­த­வரை அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் செய்து வரு­கின்­றன. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் கல்வி நிலை­யங்­களில் வகுப்­புக்கள் நடை­பெ­று­வதால் மாண­வர்கள்¸ அற­நெ­றிப்­பா­ட­சா­லை­களை தவிர்த்து வரு­வ­தாக அறிக்­கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக தனியார் வகுப்புக்களை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here