நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகள் சென்ற பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியிலே நேற்று (17) இரவு 7 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலியிலிருந்து சிவனொளிபதமலை சென்ற யாத்திரிகள் பஸ்ஸில் டெப்லோ பகுதியை சேர்ந்த மது போதையிலிருந்த குறித்த நபர் ஏற முற்பட்ட போது தவறி வீழ்ந்து பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பஸ்ஸின் சாரதியை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்