தமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், சீத்தாஎலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டுள்ளார்.
இவ்வாறு விஜயத்தை மேற்கொண்ட இவர் 19.04.2018 அன்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தேயிலை தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(க.கிஷாந்தன்)