கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் 20.04.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய கடுவெல்லேகம மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான், மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பீட மாணவன் என தெரியவந்துள்ளது.
பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, படகில் சவாரி செய்த இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)