ஆடு வெட்டிவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்று மாடுகளை இறைச்சிக்காக வெட்டிய இடமொன்றை தலவாக்கலை அதிரடி படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு 244 கிலோ கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.தலவாக்கலை பகுதியிலுள்ள ஆட்டிறைச்சி வெட்டு தொழுவத்தையே 23.04.2018 காலை சுற்றிவளைக்கப்பட்டது.
இறைச்சிக்காக ஆடு வெட்டுவதற்கான அனுமதியை பெற்று சட்ட விரோதமாக மாடு இறைச்சிக்காக வெட்டப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அதிரடிபடையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
சுற்றிவளைப்பின் போது 244 கிலோ கிராம் மாட்டிறைச்சியுடன் வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட பசுமாடொன்றையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலவாக்கலை அதிரடிடையினர் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன் , எஸ்.சதீஸ்