அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிகிச்சைக்காக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிட நேற்றைய தினம் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளார்.
அமைச்சரை பார்வையிட சென்ற மஹிந்த செல்பி எடுப்பதையும் மறக்கவில்லை.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் வைத்தியசாலையில் இருந்த அவரது பேரனை மஹிந்த மடியில் இருத்தி கொஞ்சியதுடன், குறித்த குழந்தையுடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
தனது கூட்டணியில் இருந்து விலகினாலும் அமைச்சரை பார்வையிட மஹிந்த சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.