பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சந்தேக நபர்கள் (25.04.2018). புதன்கிழமை இரவு11மணி அளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே கைது செய்யபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
எனவே இவ்வாறு கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பலாங்கொட பகுதியை சேர்ந்தவர்கலனவும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்த பட்ட ஒரு சில உபகரணங்களையும் மீட்டுள்ளதாக விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 26.04.2018.வியாழக்கிழமை அட்டன் நீதவான் நீதி மன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)