பொகவந்தலாவ மாவெளி வனபகுதியில் சட்டவிராதோமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 18பேரை தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் 28.04.2018. சனிக்கிழமை விடியற் காலை 05மணி அளவில் கைது செய்யபட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர் .எனவே இவ்வாறு கைது செய்யபட்ட 18பேரும் பொகவந்தலாவ, கெம்பியன், ராணிகாடு, பெற்றோசோ, லோய்னொன் ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்தவர்களை கைது செய்யபட்ட தாகவும் சட்டவிரோத மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்த பட்ட உபகரணங்களையும் விஷேட அதிரடி படையினர் கைபற்றியுள்ளதாக தெரிவித்தனர்
குறித்த வனபகுதியில் இது போன்ற சட்டவிரோத மாணிக்கல் அகழ்வு தொடர்ந்தும் இடம் பெற்றுவருவதாகவும் தலவாகலை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த 18சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதாகவு்ம தெரிவிக்கபடுகிறது.
கைது செய்யபட்ட 18சந்தேக நபர்களையும் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்களை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.
எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் தலவாகலை விஷேட அதிரடிபடையினர் இனைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)