தொழிலாளர் தேசிய சங்கத்தின் 53வது பிறந்ததினமும் உலக தொழிலாளர் தினமும் கொண்டாடப்பட்டது!!

0
134
எதிர்வரும்  7ம் ஆம் திகதிக்கு தொழிலாளர் தேசியசங்கத்தின்  உலக  தொழிலாளர் தினப்பேரணியும் கூட்டமும்  நகரில் இடம்பெறவுள்ள நிலையில் , இன்று 01.05.2018. தொழிலாளர் தேசிய சங்கத்தின் 53, வது பிறந்த தினம் மற்றும்  உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டும்  உணர்வுபூர்வமாக தொழிற்சங்க காரியாலயத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின்  முன்னோடி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும்  நிகழ்வை அட்டனில்  இடம்பெற்றது.

நிகழ்வில் பாராளூமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னனியின் செயலாளருமாகிய எம் திலகராஜ் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர் பிலிப் தொழிலாளர் மாகணசபை   உறுப்பினர்களாகிய ஸ்ரீதரன். ராம் உட்பட    பிரதான, கிளைக் காரியாலயங்களில் கடமையாற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர் இதன் போது
அட்டன் பூல்பேங் தோட்டத்தில் அமைக்கப்பட்டு விரைவில் மக்களுக்கு கையளிக்கப்படவிருக்கும் வீடமைப்புத்திட்டத்திற்கு ‘பி.வி.கந்தையாபுரம்’ என பெயர் சூட்டுவதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றப்பட்டதுடன்  கேக் வெட்டியும்  தொழிற்சங்க முன்னோடிகளின் நினைவு கூறும் வகையில் உரைகளும் இடம்பெற்றது .
FB_IMG_1525172321381
பி.வி.கந்தையா முன்னாள் தொழிலாளர் தேசிய சங்க பொதுச் செயலாளராகவும் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் விளங்கியவர். என்பதுவும் குறிப்பிடத்தக்கது .
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here