பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றை இறக்குமதி செய்தவற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தை வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் வரி 39 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே அமைச்சு இத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.