மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சக்திவேலுக்கு பிணை!!

0
132

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சக்திவேலுக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அட்டன் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்குகள் மூன்றுக்கு ஆஜராகத பட்சத்தில் இவருக்கு எதிராக நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்துள்ளது.இதற்கமைவாக 09.05.2018 அன்று சட்டதரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜராகிய இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு நீதிமன்றம் ஐயாயிரம் ரூபாய் ரொக்க பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி டி.சரவணராஜா உத்திரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அட்டன் நகரில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இவருக்கு எதிராக பிடியானை பிறப்பத்தமையும் குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here