பெய்துவரும் அடை மழையினால் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது
10.05.2018 பெய்த கடும் மழையில் நகரின் பிரதான வீதி நீரில் மூழ்கியதுடன் சந்தைப்பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.
பாடசாலை மாணவர்கள் உட்பட நகருக்கு வருகைத்தந்தோர் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் நகரின் நீர் வடிகாலமைப்பு முறையாக இல்லாத நிலையிலே நகரில் மழைகாலங்களில் வெள்ளப்பெருக்கெடுப்பதாக நகர மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்