அண்மைகாலமாக மீண்டும் சிறுத்தைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக குடாகம பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வரமுடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள் தன் வீட்டு வளர்ப்பு நாய்கள் கூடுகளிலே வளர்த்து வருவதாவும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகைத்தரும் சிறுத்தைகள் கூடுகளை உடைத்து நாய்களை கொன்று விடுவதாக தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பில் வன ஜீவி அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் வெடிகள் வைத்த நிலையில் சிறிதுகாலம் சிறுத்தையின் நடமாட்டம் குறைவடைந்திருந்த போதிலும் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தைகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்