இலங்கை காலி மாநகர சபையில் தமிழ் மொழியில் உரையாடவும், ஆவனங்களை தமிழில் மொழி
பெயர்க்கவும் போராடி வெற்றி பெற்றுள்ளார் திருமதி .ரிஹானா_மஹ்ரூப்.!
150 ஆண்டு பழைமையான காலி மாநகர சபையில் சிங்கள மொழி மட்டுமே உரையாடல் இருந்து வந்தது, அங்கு தமிழை தாய்மொழியாக கொண்ட இரண்டாவது முஸ்லீம் பெண் உறுப்பினரால் தற்போது தமிழ் அங்கு ஒலிக்க தொடங்கியுள்ளது.!
தன் தாய் மொழி தமிழ் என்பதாலே உரிமைக்காக குரல் கொடுத்ததாகவும், இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் சிலர் சிங்கள மோகத்தினாலேயே தமிழை விட்டு சிங்களத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்,
ஆனால் முஸ்லீம்களின் தாய் மொழி தமிழ்,தான் தாய்மொழி தமிழே கல்வி பயின்றதாகவும்
எனவே முஸ்லீம்கள் பிற மொழி கற்பது தவறு இல்லை ஆனால் தாய் மொழி தமிழை ஒருபோதும் மறந்துவிட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.!
சகோதரியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தமிழ் தங்களுக்கு மட்டுமே உரியது என்பவர்களின் கவனத்திற்கு.!
ஷான் சதீஸ்