கேகாலை மாவட்டத்தில் 39 பாடசாலைகளுக்கு தலா 02 ஏக்கர் வீதம் காணி வழங்க அமைச்சரவை அங்கிகாரம்
சம்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்தில் 39 பாடசாலைகளுக்கு தலா 02 ஏக்கர் வீதம் காணி வழங்க வழங்க அமைச்சiவை அங்கிகாரம் கிடைத்தள்ளது. இதனை மாகாணம் பயன்படுத்தி பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். இது நாங்கள் அரசிய்ல் ரீதியாக பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும் என்று கூறுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தவைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்.
சம்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட காயத்திரி தமிழ் வித்தியாலயத்திற்கு 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்தக் கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இதன் போது இங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் பி.சிவஞானந்தன் தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்திற்கு கௌரவ அதிதிகளாக கேகாலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜித் பெரேரா ஐக்கியதேசிய கட்சியின் ருவன்வெல்ல தொகுதி அமைப்பாளர் துஸித்தா விஜயமான கல்வி இராஜாங்க அமைச்சரின் கேகாலை மாவட்ட இணைப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர். மலையகத்தின் பாடசாலைகள் அமைப்பதற்கு காணி இன்மை காரணமாக பல அபிவிருத்திகள் பின்னடைவை நோக்கி செல்கின்றது. பாடசாலைக்கு காணிகளை பெருவதில் பாரிய பிரச்சனைகள் காணப்படுகின்றன. இதனால் கல்வி அமைச்சு மூலம் தோட்ட பாடசாலைகளுக்கு கட்டாயம் 02 ஏக்கர் காணி வழங்க வேண்டும் என அமைச்சரவை பத்திரம் தாக்கள் செய்து சுமார் 353 பாடசாலைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. என்று கூறினார்.