மினி சூறாவளியினால் ஆறு குடியிருப்புகள் சேதம்- வட்டவலையில் சம்பவம்!

0
151

மலையகத்தில் ஏற்பட்டுள்ள  சீரற்ற கால நிலையினால் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 6 குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளது29.05.2018 அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பஸ்டோ தோட்டத்தில் லயன் குடியிருப்பின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன். அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட வெளிஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றின் கூரைப்பகுதி காற்றினால் அள்ளுண்டு சென்றதையடுத்து மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளது.

உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் இரண்டு குடியிருப்புகள் கடும் சேதமாகியுள்ளதுடன் ஏனைய குடியிருப்புகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.

06 1527573780778_01 1527574431412_04 1527574476159_05 1527574480213_02 1527574481872_01

பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை திருத்தியமைக்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதுடன் பாதிப்புக்குள்ளாகியவர்கள் தற்காளிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுள்ளனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here