மலையகத்தில் சீரற்ற கால நிலை நிலவி வருகின்றமையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுமழையுடன் கூடிய பனிமூட்டம் நிறைந்த கால நிலை காணப்படுகின்றமையினால் வாகனங்களை அவதானதுடன் முன்விளக்குகளை ஒளிரவிட்டு செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
04.05.2018 காலை முதல் அட்டன் கொழும்பு வீதியிலும் அட்டன் நுவரெலியா வீதியிலும் பனிமூட்டம் நிறைந்து காணப்படுவதுடன் வீதிகளிலும் வலுக்கல் தன்மை காணப்படுவதால் வாகனசாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்