இந்திய அரசாங்கத்தின் இலங்கையின் மலையக மக்களுக்கு வழங்கபட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் அடிகல் நாட்டும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைசர் பழனிதிகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரின் தலைமையில் தலவாகலை மடக்கும்புற மேற்பிரிவு தோட்டம் வட்டகொடை பிரிவில் புதிய கிராமங்களுக்கான 250வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வு 04.06.2018திங்கள் கிழமை காலை 10மணிக்கு இடம் பெற்றது.இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக இந்திய பதில் உயரஸ்தானிகர் ஹரிந்த்பாக்சி அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜன் மாகாணசபை உறுப்பினர்கள் மடக்கும்புற தோட்ட முகாமையளர் மற்றும் உதவி முகாமையாளர் பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்